இந்திய ஐடி நிறுவனங்கள் அடுத்தடுத்து வெளியேறும் காரணத்தால் அதிகச் சம்பளத்தைக் கொடுத்து புதிய ஊழியர்களையும் அல்லது பழைய ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம், பதவி உயர்வு கொடுத்துத் தக்க வைத்துக்கொள்கிறது.
இந்த நடைமுறை ஐடி நிறுவனங்களின் லாபத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் நிலையில் ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் நியமனத்திலும், சம்பளம் நிர்ணயம் செய்வதில் மீண்டும் தனது ஆதிக்கத்தைப் பெற வேண்டும் என்பதற்காக முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இதனால் ஊழியர்களின் தேவை குறைவது மட்டும் அல்லாமல் ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான லாபத்தைப் பார்க்க முடியும்.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திணறும் இந்திய பொருளாதாரம்.. தமிழ்நாட்டின் நிலைமை என்ன தெரியுமா..?
ஐடி நிறுவனங்கள்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பது மூலம் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகப்படியான லாபத்தை அள்ளிக்கொடுத்தாலும், இந்தியா முதல் அமெரிக்கா வரையில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் ஊழியர்கள் தொடர் வெளியேற்றம் மூலம் ஐடி நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆட்டோமேஷன்
இந்க நிலையில் ஐடி சேவை துறையில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது வர்த்தகம், பணிகளில் தினசரி நடைமுறையில் இருக்கும் பணிகளை ஆட்டோமேஷன் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஆட்டோமேஷன் மூலம் ஊழியர்களின் பணி சுமை குறைவது மட்டும் அல்லாமல் ஊழியர்களின் தேவையும் பெரிய அளவில் குறையும்.
600 பில்லியன் டாலர்
உலகளாவிய ஐடி ஆராய்ச்சி நிறுவனமான Gartner செய்த ஆய்வில் டிஜிட்டல் அட்டோமேஷன் துறை நடப்பு நிதியாண்டில் 600 பில்லியன் டாலர் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த 5 வருடத்தைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் 35 சதவீதம் வரையில் வருடாந்திர வளர்ச்சி அடையும் எனக் கணித்துள்ளது.
இன்போசிஸ்
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் சுமார் 24000 பாட்களை வைத்து தனது சேவையின் தரத்தையும் வேகத்தையும் மேம்படுத்தி வருகிறது. மேலும் இன்போசிஸ் பாட் பேக்டரி (Bot Factory) உருவாக்கத் திட்டமிட்டு உள்ளதாக இன்போசிஸ் உயர் தலைவர் எஸ் ரவி குமார் தெ
செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங்
இதேபோல் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் தங்களது பணியில் ஆட்டோமேஷன் உடன் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்ற சேவைகளை அதிகளவில் சொந்த நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்குச் சேவையிலும் பயன்படுத்தி வருகிறது.
இரண்டு பக்கமும் லாபம்
இந்த ஆட்டோமேஷன் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் சேவை தரம் உயர்வது மட்டும் அல்லாமல் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு சிறப்பான சேவையை அளிக்க முடியும் என்பதால், இது ஐடி சேவை நிறுவனங்களுக்குக் கூடுதல் வருமானத்தைப் பெற வாய்ப்பாக உள்ளது.
Indian IT companies took Automation as primary tool to cut down high attrition and inflation
Indian IT companies took Automation as primary tool to cut down high attrition and inflation ஐடி நிறுவனங்கள் எடுத்த திடீர் முடிவு.. ஐடி ஊழியர்கள் ஷாக்..!