பிரித்தானியாவில் மறுசுழற்சி ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிலாந்து, பர்மிங்காம் நகர மையத்தின் புறநகரில் உள்ள நெசெல்ஸ் பகுதியில் உள்ள ஸ்மர்ஃபிட் கப்பா (Smurfit Kappa) மறுசுழற்சி ஆலையில் சுமார் 8,000 டன் காகிதம் மற்றும் அட்டை தீப்பிடித்து எரிந்துவருகிறது.
இந்நிலையில், 110 தீயணைப்பு வீரர்கள் தீயை சமாளித்து வருவதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
தீவிபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது, அது சம்பவத்தின் தீவிரத்தை காட்டுகிறது. மேலும், புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: பிரித்தானியா ஸ்தம்பிக்கும்… 100 ஆண்டுகளில் முதன்முறை: நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை
ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணியளவில் மவுண்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள இடத்திற்கு அவசர சேவைகள் முதலில் அழைக்கப்பட்டன.
உடனடியாக நெசெல்ஸின் மவுண்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள ஸ்மர்பிட் கப்பா மறுசுழற்சி மையத்திற்கு இரண்டு வான்வழி ஹைட்ராலிக் தளங்கள், பல தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் அதிக அளவு நீர் இறைக்கும் அலகு உட்பட 20 உபகரணங்களை வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் தீயணைப்பு சேவை அனுப்பியுள்ளது.
மேலும் ஒரு கட்டத்தில் அருகிலுள்ள கால்வாயில் இருந்து நிமிடத்திற்கு 8,000 லிட்டர் தண்ணீர் பம்ப் செய்யப்படுகிறது என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அப்பாவி மக்கள் தஞ்சமடைந்துள்ள இரசாயன ஆலை மீது ரஷ்யா குண்டு மழை
இச்சம்பவம் காரணமாக உள்ளூர் சாலைகள் மூடப்பட்டுவிட்டதால், உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்கள் ஜன்னல்களை மூடி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீயை கட்டுக்குள் வைக்க பணியாளர்கள் மிகவும் கடினமாக உழைத்து வருவதாக கூறப்படுகிறது.