Google AI Sentient: கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளரின் வேலைக்கு ஆபத்து வந்துள்ளது. ஒரு அறிக்கையின்படி, கூகுள் அதன் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுக் குழுவில் இருந்து மென்பொருள் பொறியாளரான பிளேக் லெமோயினை இடைநீக்கம் செய்துள்ளது.
மூன்றாம் தரப்பினருடன் நிறுவனத்தின் திட்டம் குறித்த ரகசியத் தகவலைப் பகிர்ந்ததாக பிளேக் மீது குற்றம் சாட்டப்பட்டது. இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கூகுளின் சேவையகங்கள் குறித்து பிளேக் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார்.
கூகுள் சர்வர்களில் ஒரு ‘Sentient’ செயற்கை நுண்ணறிவை எதிர்கொண்டதாக பிளேக் பகிரங்கமாகக் கூறினார். இந்த AI சாட்போட் மனிதனைப் போல கூட சிந்திக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
திருமணம் ஆன பெண்கள் Google-இல் என்ன தேடுகிறார்கள் – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!
LaMDA என்றால் என்ன?
கூகுள் முதன்முதலில் LaMDA-ஐ, அதன் முதன்மை டெவலப்பர் மாநாட்டான Google I/O 2021 இல் உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாதிரியாக அறிவித்தது.
இதன் உதவியுடன் கூகுள் அசிஸ்டென்டால் எந்த தலைப்பிலும் உரையாட முடியும் என்பது குறிப்பிடதக்கது. நிறுவனத்தின் தரப்பில் இருந்து கூற வேண்டும் என்றால், எந்த தலைப்பிலும் இந்த அசிஸ்டென்ட் மக்களுடன் உரையாடும்.
எளிமையான சொற்களில் சொல்ல வேண்டும் என்றால், சாமானிய மனிதரிடத்தில் ஒரு உரையாடலை நடத்தி உங்களுக்கான தீர்வை எப்படி பெறுகிறீர்களோ, அதேபோன்று கூகுள் அசிஸ்டென்ட் சாட்போட் உடன் உரையாடல் நடத்தி முடிவுகளை எடுக்க முடியும். இதை தான் சென்டியன்ட் ‘sentient’ என்று சொல்கிறோம்.
இந்த ஆண்டு கூகுள் டெவலப்பர் மாநாட்டில், Google LaMDA 2.0-ஐ நிறுவனம் அறிவித்தது. இது சாட்போட்டின் திறன்களை மேலும் வலுவூட்டச் செய்கிறது. புதிய மாடல் ஒரு யோசனையை எடுத்து “கற்பனை மற்றும் தொடர்புடைய விளக்கங்களை” உருவாக்கும் வல்லமை கொண்டது.
கேள்வி கேட்ட இருவரை தூக்கிய நிறுவனம்
முன்னதாக, Alphabet Inc இந்த வார தொடக்கத்தில் பிளேக்கை ஊதியத்துடன் விடுப்பில் அனுப்பியது. ஏனெனில் அவர் நிறுவன விதிகளை மீறியிருந்தார். AI நெறிமுறைகளை மனதில் கொள்ளாமல், தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் AI நெறிமுறைக் குழுவின் முன்னாள் உறுப்பினரான Margaret Mitchell-ம் வெளியேற்றப்பட்டுள்ளார். பிளேக்கைப் போலவே அவரும் நிறுவனத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஏனெனில், AI உணர்திறன் உடையது என்ற பிரச்னையை இவர்கள் இரண்டு பேரும் தான் எழுப்பியுள்ளனர்.
வாஷிங்டன் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில், பிளேக் அவர்களுடன் கலந்துரையாடிய நபர் Google AI என்று கூறினார். வெவ்வேறு ஆளுமைகளை ஏற்று மனித பயனர்களுடன் கலந்துரையாடும் அரட்டை போட் ஒன்றை உருவாக்க LeMDA பயன்படுகிறது.
அதை நிரூபிக்க சில பரிசோதனைகளையும் செய்ததாக பிளேக் கூறினார். இருப்பினும், நிறுவனத்தின் மூத்த அலுவலர்கள் அவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Nothing Phone 1: போன்களின் புதிய நாயகன் நத்திங் போன் 1 அவதாரம் ஜூலை 12 முதல்…!
கூகுள் விளக்கம்
கூகுள் செய்தித் தொடர்பாளர் பிரையன் கேப்ரியல் கூறுகையில், “சில பெரிய AI சமூகங்கள், உணர்திறன் மற்றும் பொதுவான நீண்ட கால செயற்கை நுண்ணறிவு வாய்ப்புகளை பரிசீலித்து வருகின்றன. இருப்பினும், தற்போதைய உணர்திறன் அல்லாத மாதிரியால் இது சாத்தியமில்லை.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
எங்கள் குழுவில் நெறிமுறைகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் இதனை கண்காணித்து வருகின்றனர். எனவே, தவறான கருத்துகள் பகிரப்படுவதை கூகுள் விரும்பவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.