வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அமெரிக்கா சென்ற இந்திய தொழிலதிபரும் கோடக் மஹிந்திரா வங்கியின் இணைத் தலைவருமான ஜெய் கோடக் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் தனியார் வங்கிகளுள் ஒன்றான கோடக் மஹிந்திரா வங்கியின் சிஇஓ.,வாக இருப்பவர் உதய் கோடக். இவரது மூத்த மகனான ஜெய் கோடக் இவ்வங்கியின் இணைத் தலைவராக உள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பழைய மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். அங்குள்ள பாஸ்டன் விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளார். ‛செக்-இன்’ செய்யவே 5 மணி நேரம் ஆகியுள்ளது. இதனால் எரிச்சலடைந்த ஜெய் கோடக் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
ஜெய் கோடக் கூறியுள்ளதாவது: ஹார்வர்ட் பல்கலையில் ஒரு நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். மோசமான அனுபவமாக இருந்தது. இங்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது, நகரங்கள் அசுத்தமாக இருக்கிறது, ஒவ்வொரு நாளும் துப்பாக்கி வன்முறைகள் தலைப்பு செய்தியாக உள்ளன. விமான நிலையத்தில் நீண்ட வரிசை, விமானங்களின் கால தாமதம், மணிக்கணக்கான காத்திருப்பு போன்றவை உள்ளன.
ஆனால் இந்தியாவிற்கு செல்வது ஒரு சிறந்த இடத்திற்கு திரும்புவது போல் உணர்கிறேன். பாஸ்டன் விமான நிலையத்தில் செக்-இன் செய்ய 5 மணி நேரமாக இருக்கிறேன். இந்த விமான நிலையத்தை விட மும்பை விமான நிலையம் அதிகமான பயணிகளை எதிர்கொள்கிறது. ஆனாலும், அங்கு சில வரிசைகள் மட்டுமே இருக்கும். அனைத்து கவுன்ட்டர்களிலும் பணியாளர்கள் இருப்பர். விமான நிலையமே புதிதாகவும், சுத்தமாகவும் இருக்கும். விமான பயணமும் மலிவானவை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement