கும்பகோணம் அருகே பத்து நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த தம்பதியர் படுகொலை செய்யப்பட்டனர்.
சோழபுரம் அருகேயுள்ள விளந்தகண்டம் அய்யா காலனியைச் சேர்ந்தவர் சரண்யா (28) இவரும் சென்னையைச் சேர்ந்த மோகன் என்பவரும் பத்து நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்;து கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் விளந்தகண்டத்தில் உள்ள தனது வீட்டுக்கு கணவருடன் சரண்யா இன்று வந்திருந்தார். இதையடுத்து சரண்யாவின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மைத்துனரும் சரண்யாவின் முன்னாள் காதலருமான ரஞ்சித் ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் இருவரையும் வெட்டிப் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சோழபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்த சரண்யாவின் சகோதரர் சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் தலைமறைவாகி உள்ளனர். இவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM