உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலையில் விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து காவலர் மீட்ட காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அம்மாநிலத்தில் காசிப்பூர் பகுதியில் பரபரப்பான சாலையில், வேகமாக திரும்பிய மின்சார ஆட்டோவில் இருந்து குழந்தை ஒன்று கீழே விழுந்தது. இதைக் கண்ட போக்குவரத்து காவலரான சுந்தர் லால், துரிதமாக செயல்பட்டு எதிரே வந்த பேருந்தை நிறுத்தி அக்குழந்தையை மீட்டார்.
இது தொடர்பான வீடியோக் காட்சியை சத்தீஸ்கரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவனிஷ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த நிலையில், பலர் அந்த காவலரை பாராட்டி வருகின்றனர்.
ट्रैफ़िक पुलिस के जवान सुंदर लाल.? pic.twitter.com/ulmX48a5ki — Awanish Sharan (@AwanishSharan) June 12, 2022 “> ट्रैफ़िक पुलिस के जवान सुंदर लाल.? pic.twitter.com/ulmX48a5ki — Awanish Sharan (@AwanishSharan) June 12, 2022