பிரபல தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், எஸ் பி பாலசுப்ரமணியன் 75ஆவது நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
இதில், இசைஞானி இளையராஜா கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சிகளைப் பார்க்கும் ரசிகர்களுக்கு மனம் நெகிழ்ந்து போய் உள்ளனர்.
பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஜூன் 3ஆம் தேதி முதல் எஸ்பிபி 75 என்ற நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி நடத்தி வருகிறது.
இதில், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், பிரசாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது நினைவுகளை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், வருகின்ற ஜூன் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.
இதில், இளையராஜா மேடையில் ‘இளமை எனும் பூங்காற்று’ எனும் பாடலை கண் கலங்கியபடியே பாடினார். பின்னர் மேடையை விட்டு இறங்கியதும் அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.