டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கு குறித்து விசாரிக்கக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை ஜூன் 13-ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து இன்று காலை அமலாக்கத்துறை முன்பு ராகுல் காந்தி நேரில் ஆஜரானார்.
முன்னதாக, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. ஆஜராகுவதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர்.
டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் அத்தனை தலைவர்களும் தொண்டர்களும் இன்னமும் காவல் நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்றும் 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து டெல்லியின் பல காவல் நிலையங்களில் அனைவரும் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்பாக ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், உங்கள் மீது பளு வாய்ந்த மூன்று போலீஸ்காரர்கள் மோதிச் சென்ற பின்னும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்படாமல் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டகாரர்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாம்: நேஷனல் ஹெரால்டு வழக்கு: இன்று ஆஜராகிறார் ராகுல்! டெல்லி காங்கிரஸ் பேரணிக்கு அனுமதி மறுப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM