எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா பங்கேற்றுள்ளார்.
எதிர்க்கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச விடுத்த அழைப்பின் பேரில் தான் கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக கொடஹேவா தெரிவித்தார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
குறித்த கூட்டத்தின்போது போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலேயே தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டனர்.