Coimbatore to Shirdi Train , கோவையிலிருந்து சீரடிக்கு நாளை முதல் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் டிக்கெட் கட்டணம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஷீரடிக்கு 5 நகரங்களில் இருந்து தனியார் ரயில்களை இயக்குவதற்கு பிரதமர் மோடியின் ‘பாரத் கௌரவ்’ என்ற திட்டத்தின் கீழ் ரயில்வே துறை அனுமதி அளித்தது. அதில் கோவையும் இடம்பெற்றது.
இந்நிலையில் நாளை அதாவது ஜூன் 14 மாலை 6 மணியளவில் வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயிலை கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயக்கவுள்ளது.
கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் ரூ. 1,280 . ஆனால் தனியார் நிறுவனம் வசூலிப்பது ரூ.2500 . மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.2,360 ஆனால் தனியார் கட்டணம் ரூ. 5000.
குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.4,820 ஆனால், தனியார் கட்டணம் ரூ.7000 . குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.8,190 அனால் தனியார் கட்டணம் ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு மக்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.