தமிழகத்தில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள் நடப்பதாகவும், அரசியல் தலையீடு காரணமாக காவல்துறையினர் தவறு செய்வதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் பேட்டியளித்த அவர், முதலமைச்சர் உத்தரவிடப்பின் அமைக்கப்பட்ட, காவல் ஆணையத்தின் நிலை என்ன? என்றும் போலீசாரின் பணிச்சுமையை குறைக்க என்ன திட்டம் எடுக்கப்பட்டுள்ளது ? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், அதிமுகவுடன் எதிர்க்கட்சிக்கு போட்டி போடும் மனப்பான்மை பா.ஜ.க.விற்கு இல்லை என்றும், பா.ஜ.க.வை வளர்க்கவே பாடுபடுவதாகவும் அண்ணாமலை கூறினார்.