காவல் நிலையத்திற்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை என்று, பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அன்பு என்ற ராஜசேகர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்று நாகப்பட்டினத்தில் விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவங்கள் குறித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
“இரண்டு நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள். நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன். காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை.
கடந்த ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா???” இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.