ஆர்பிஎல் வங்கி பங்குகள் கிட்டதட்ட 23% வீழ்ச்சி.. ஏன்.. முதலீட்டாளர்கள் கவலை..!

ஆர்பிஎல் வங்கி பங்கின் விலையானது இன்று காலை தொடக்கத்தில் 17% வீழ்ச்சி கண்டு, ஒரு பங்கிற்கு 93 ரூபாயாக வீழ்ச்சி கண்டு காணப்பட்டது. முடிவில் 22.67% சரிவினைக் கண்டு, 87.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இந்த சரிவானது இவ்வங்கிபுதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சுப்பிரமணிய குமார் நியமனம் செய்தததையடுத்து இந்தளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் விஸ்வவீர் அஹூஜா பதவியில் இருந்து விலகி கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு, தற்போது தான் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து சின்ன நாட்டுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனம்: இந்தியா வாய்ப்பை இழந்தது எப்படி?

40 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவமுள்ளவர்

40 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவமுள்ளவர்

தனியார் துறையை சேர்ந்த வங்கியான ஆர்பிஎல் வங்கி மூத்த வங்கியாளரான ஆர் சுப்ரமணிகுமாரை அதன் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாரியாக நியமனம் செய்துள்ளது. இவர் சுமார் 4 தசாப்த காலமாக அனுபவமுள்ள ஒரு மூத்த வங்கியாளாராகும்.

பிரச்சனைகளை துரத்தியடித்தவர்

பிரச்சனைகளை துரத்தியடித்தவர்

இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் டி ஹெச் எஃப் எல்-லில் இருந்த பிரச்சனைளை களைந்து, வெற்றியை பெற்ற நபராகும். இந்த நிலையில் தன் தற்போது இந்த தனியார் வங்கியின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வங்கியின் சொத்து தரம் மற்றும் வங்கியை வளர்ச்சி பாதைக்கு மேம்படுத்தும் திட்டம் இருந்த போதிலும், இவரின் பங்கு முக்கியமானதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயாளின் நியமனம்
 

தயாளின் நியமனம்

கடந்த ஆண்டில் ஆர்பிஎல் வங்கியில் கடன் மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி அதன் தலைமை பொது மேலாளாரான யோகேஷ் தயாளை இந்த தனியார் வங்கி குழுவின் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில் வங்கியின் நீண்டகால எம்டி மற்றிம் சிஇஓ ஆக இருந்த விஸ்வவீர் அஹூகா உடனைடியாக விடுப்பில் அனுப்பப்பட்டார். இதனால் கடந்த ஆண்டே இந்த வங்கி பங்குகள் கடும் சரிவினைக் கண்டன.

மேம்படுத்த திட்டம்

மேம்படுத்த திட்டம்

இந்த நிலையில் தான் தற்போது புதிய எம் டி மற்றும் சி இ ஒவை நியமனம் செய்துள்ளது. இதன் மூலம் வங்கியின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில் இவ்வங்கி பங்கின் விலையானது என் எஸ் இ-யில் 16.99% சரிவினைக் கண்டு, 94.25 ரூபாயக வர்த்தகமாகி வருகின்றது.

இன்றைய பங்கு விலை?

இன்றைய பங்கு விலை?

காலை அமர்வில் பி எஸ் இ-யில் இவ்வங்கி பங்கின் விலை 17.12% சரிவினைக் கண்டு, 93.95 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 102.05 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்த பட்ச விலை 92.75 ரூபாயாகும். இதுவே இதன் 52 வார குறைந்தபட்ச விலையும் கூட, இதன் 52 வார உச்ச விலை 226.45 ரூபாயாகும்.

முடிவில் ஆர்பிஎல் வங்கி பங்கின் விலையானது முடிவில் கிட்டதட்ட 23% வீழ்ச்சி கண்டுள்ளது. 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Why did RPL Bank shares fall by almost 23%?

Why did RPL Bank shares fall by almost 23%? The decline comes on the heels of the appointment of Subramania Kumar as MD and CEO of the bank.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.