வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெனீவா : மீனவர்களுக்கான மீன்பிடி மானியத்தை நிறுத்துவது, இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என, எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், மீனவர்களுக்கான மீன்பிடி மானியத்தை அளித்து வருகின்றன. உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி இந்த மானியத்தை நிறுத்த, 21 வளர்ந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.இதற்கான கூட்டம், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள ஐ.நா., சபையில் நேற்று நடந்தது.
இதையடுத்து, மீன்பிடி மானியத்தை ரத்து செய்வது இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என, மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.நம் நாட்டின் சார்பில், தமிழகம், குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கத்தை சேர்ந்த 34 மீனவர்கள் அடங்கிய குழு சுவிட்சர்லாந்து சென்றுஉள்ளது. இவர்கள், மீன்பிடி மானியம் ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா., சபை கட்டடத்தின் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement