அப்பா அம்மா கனவை நிறைவேற்றி விட்டேன்: புது வீடு வாங்கிய யாஷிகா பெருமிதம்

கழுகு2, நோட்டா, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சியாக நடித்தவர் யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். தற்போது ராஜபீமா, பகீரா, சிறுத்தை சிவா, பெஸ்டி, தி லெஜண்ட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது சொந்தமாக புதிய வீடு வாங்கியுள்ள யாஷிகா தன் தாய் தந்தையின் கனவை நிறைவேற்றி விட்டதாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது: சொந்த வீடு வாங்கி, என் அம்மா அப்பாவின் கனவை நான் நிறைவேற்றுவேன் என என் வாழ்வில் ஒருபோதும் நினைத்ததே இல்லை. நீங்கள் மிகவும் ஆசைப்பட்டு விரும்பிய ஒரு கனவு நிச்சயமாக உங்களது கடின உழைப்பின் மூலமாகவும் உங்கள் பெற்றோரின் ஆதரவு மூலமாகவும் கண்டிப்பாக நிறைவேறும்.

எனக்கு 19 வயதாக இருக்கும்போது இந்த வீட்டைப் பார்த்து பதிவு செய்தோம். ஆனால் கொரோனா பிரச்சினை மற்றும் என் வாழ்வில் இடையில் நடந்த மிக மோசமான விபத்து, நண்பர்களை இழந்தது போன்ற பல பிரச்சினைகள் காரணமாக இந்த வீட்டுக்குள் நுழைவதற்கு சரியான நேரம் அமையாமல் இருந்தது. ஆனால் இறுதியாக அது தற்போது நடந்துவிட்டது. கடவுளுக்கு நன்றி. இந்த வயதில் நான் ஒரு வீட்டை எனதாக்குவேன் என நினைக்கவே இல்லை. ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.

இவ்வாறு யாஷிகா எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.