ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பால் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் உணவுப் பாதுகாப்பின்மைக்குள் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் மைக்கேல் பேச்லெட் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் நான்கு மாதங்களாக நடைப்பெற்று வரும் நிலையில், அங்கு மீறப்படும் மனித உரிமைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்(UN) அமைப்பின் பேரவையில் திங்களன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மனித உரிமைகள் தலைவர் மைக்கேல் பேச்லெட் உக்ரைன் மீதான ரஷ்ய போர் ”அழிவு மற்றும் பேரழிவை” ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன்” நாம் இங்கு கடைசியாக கூடியதில் இருந்து தற்போது வரை உக்ரைன் ரஷ்யா போர் பலரது வாழ்க்கையை அழித்துள்ளது, பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரங்கள் அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் வரை அதன் அடையாளத்தை விட்டிச் செல்லும் என தெரிவித்தார்.
மேலும் ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள உலகளாவிய உணவு, எரிபொருள் மற்றும் நிதி நெருக்கடிகள், மில்லியன் கணக்கானவர்களை உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் வறுமையில் மூழ்கடிக்கும் அபாயத்தில் தள்ளியிருப்பதாக தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: சரணடையுங்கள் அல்லது…உக்ரைனியர்களுக்கு வேறு வழியில்லை: ரஷ்ய ஆதரவு தலைவர் எச்சரிக்கை!
உலகின் உணவுத் திட்டத்தின்படி 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 276 மில்லியனாக இருக்கும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையுடன் வாழும் மக்களின் எண்ணிக்கையானது, 323 மில்லியன்கள் வரை இந்த ஆண்டு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது சமூகத்தின் ஏழைகளை பெரும்பாலும் பாதிப்பதற்கான வாய்ப்புள்ளது என மைக்கேல் பேச்லெட் தெரிவித்துள்ளார்.