மருந்துகடைகாரர் பணத்திற்காக கொலைசெய்யப்பட்டதை கண்டித்து வணிகர் சங்க நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் அந்த பகுதியில் மருந்துகடை நடத்தி வருகிறார். சம்பவதன்று செந்தில்வேல் மற்றும் மருந்து கடை ஊழியர் முருகானந்தத்தை வெட்டி கல்லாவில் இருந்த ரூ.2,500 பணத்தையும் எடுத்துச்சென்றனர்.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தஞ்சையை சேர்ந்த ஹரிகரன், தினேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தஞ்சை பகுதியை 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் ஆர்பார்ட்டத்தில் ஈடுப்பட்டனர்.