மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கின பாசோவில் புலம்பெயர் மக்கள் வாழும் கிராமத்தில் கிளர்ச்சி குழு நடத்திய கண்மூடித்தன துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜர் நாட்டை ஒட்டியுள்ள எல்லையோர கிராமத்திற்குள் நள்ளிரவில் புகுந்த கிளர்ச்சி கும்பல் குழந்தைகள், பெண்கள் என பாரபட்சமின்றி தாக்குதல் நடத்தி உள்ளது.
தாக்குதலில் 165 பேர் வரை கொல்லப்பட்டதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் அல் கொய்தா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகளின் செயல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.