இலங்கை அதிகாரி திடீர் ராஜினாமா: அதானிக்கு மின் திட்டம் வழங்க அழுத்தமா?

அதானி மற்றும் இந்திய பிரதமர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை எந்தவிதமான டெண்டரும் இன்றி இந்தியாவை சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தலைவர் பெர்னாண்டோ குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தனது குற்றச்சாட்டையும் அவர் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்தான் மின்சார சபை அதிகாரியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக காஞ்சனா விஜேசேகர என்பவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டி உயர்வால் கலங்கி நிற்கும் அம்பானி, அதானி, டாடா.. ஏன்..?

இலங்கை மின் திட்டம்

இலங்கை மின் திட்டம்

இலங்கையில் உள்ள மன்னார் காற்றாலை மின் திட்டத்தை அதானி குழுமத்திடம் வழங்குவதற்கு பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்சே ஆகியவர்கள் அழுத்தம் கொடுத்ததாக இலங்கை மின்சார சபை உயர்மட்ட அதிகாரி பெர்னான்டோ என்பவர் கூறியதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் சில மணி நேரத்தில் அவர் குற்றச்சாடை திரும்பப் பெற்றார்.

ராஜினாமா

ராஜினாமா

மேலும் பெர்னான்டோ தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவரது ராஜினாமாவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க என்பவர் இலங்கை அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை எவ்வாறு இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது? என்பதை இலங்கை அரசு விளக்க வேண்டும் என்றும் இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததா? என்பதை விளக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதானி நிறுவனம்
 

அதானி நிறுவனம்

இதற்கு பதிலளித்த மின்சார சபை தலைவராக இருந்த பெர்னாண்டோ அதானி நிறுவனத்திற்கு மின் உற்பத்தி திட்டத்தை வழங்குங்கள் என்று ஜனாதிபதி என்னிடம் கூறினார் என்றும் இதை வழங்குமாறு இந்திய பிரதமர் மோடி தனக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் தெரிவித்தார் என்றும் கூறினார்.

கோத்தபய ராஜபக்சே

கோத்தபய ராஜபக்சே

ஆனால் இலங்கை மின்சார சபையின் தலைவர் வெளியிட்ட கருத்தை தான் நிராகரிப்பதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது ட்விட்டர் மூலம் தெரிவித்தார். எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை நான் வழங்கவில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில்தான் திடீரென மின்சார சபை அதிகாரி பெர்னாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில் ‘தனிப்பட்ட காரணம்’ என குறிப்பிட்டு இருந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதானி விளக்கம்

அதானி விளக்கம்

இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து அதானி குழுமம் விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘இலங்கை போன்ற அண்டை நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதை எங்கள் நிறுவனம் விரும்பியதாகவும், ஒரு பொறுப்பான கார்ப்பரேட் நிறுவனம் என்ற வகையில், இலங்கைக்கு உதவுவதை அவசியமாக நாங்கள் பார்க்கிறோம் என்றும், எங்கள் இரு நாடுகளும் எப்போதும் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றன என்றும் தெரிவித்திருந்தது. மேலும் இந்த பிரச்சினை ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தால் தீர்க்கப்பட்டுவிட்டது என்றும் அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதானி

இலங்கையில் அதானி

இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதானி இலங்கை சென்று இருந்தார் என்பதும் அப்போது அவர் அந்நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து துறைமுகத் திட்டம் மற்றும் மின் உள்கட்டமைப்பு திட்டங்களில் கூட்டு சேர்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாக செய்திகள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Lanka electricity chief resigns after withdrawing remark on Adani Group deal

Lanka electricity chief resigns after withdrawing remark on Adani Group deal | இலங்கை அதிகாரி திடீர் ராஜினாமா: அதானிக்கு மின் திட்டம் வழங்க அழுத்தமா?

Story first published: Tuesday, June 14, 2022, 7:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.