ஆப்பிளுக்கு நாம தரப்போக்கும் $8 பில்லியன் வருமானம்: எப்படி தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் கேம்கள் மற்றும் மியூசிக்கை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை நாம் தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபோன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் மியூசிக் மற்றும் கேம்கள் சேவையையும் செய்து வருகிறது என்பது தெரிந்ததே.

வரும் 2025ம் ஆண்டுக்குள் கேம்கள் மற்றும் மியூசிக் மூலம் 8.2 பில்லியன் வருமானம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உயரும் என்றும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இனிமேல் தண்ணீர் பிரச்சனையே இல்லை: பெங்களூர், மால்கள், தொழிற்சாலைகள் நிம்மதி!

ஆப்பிள் மியூசிக்

ஆப்பிள் மியூசிக்

உலகின் நம்பர் ஒன் ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் மியூசிக் மற்றும் கேம்கள் சேவைகளை அதிகரித்து வருகிறது. மேலும் அதன் மியூசிக் மற்றும் கேம்கள் தளத்தை ஏராளமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

180 மில்லியன் சந்தாதாரர்கள்

180 மில்லியன் சந்தாதாரர்கள்

இந்த நிலையில் மியூசிக் மற்றும் கேம்கள் சேவைகள் மூலம் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 180 மில்லியன் சந்தாதாரர்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மியூசிக் தளத்திற்காக மட்டும் 110 மில்லியன் சந்தாதாரர்களும், கேமிங் தளத்திற்காக 70 மில்லியன் சந்தாதாரர்கள் வரும் மூன்று ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனத்திற்கு கிடைக்கும் என்றும் ஜேபி மோர்கன் அனாலிஸ்ட் நிறுவனத்தின் சமித் சாட்டர்ஜி அவர்கள் கணித்துள்ளார்.

மியூசிக் ஸ்ட்ரீமிங்
 

மியூசிக் ஸ்ட்ரீமிங்

ஆப்பிள் மியூசிக் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பதும், மியூசிக் நிறுவனத்தில் முன்னணியாக உள்ள Spotify நிறுவனத்திற்கு பிறகு இரண்டாவது பெரிய மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையை ஆப்பிள் நிறுவனம்தான் தந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் 2025ஆம் ஆண்டில் 7 பில்லியன் டாலர்களை பொதுமக்களிடமிருந்து மியூசிக் வகைக்காக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஆர்கேட்

ஆப்பிள் ஆர்கேட்

அதேபோல் ஆப்பிள் ஆர்கேட் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு கேமிங் தளத்திற்காக தொடங்கப்பட்டது என்பதும், இந்த நிறுவனம் கேமிங் தளத்தில் 1.2 பில்லியன் டாலர் வசூலித்து வருவதாக மதிப்பிட்டுள்ளது.

வருமானம்

வருமானம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர், ஆப்பிள் டிவி, ஆப்பிள் ஆர்கேட் மற்றும் ஆப்பிள் மியூசிக் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்த பிரிவின் மூலம் மார்ச் காலாண்டில் $19.82 பில்லினை இந்நிறுவனம் ஈட்டியுள்ளது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் வரும் 2028 ஆம் ஆண்டில் கேமிங் மார்க்கெட் அளவை $360 பில்லியனை எட்டும் என்றும் 2025 ஆம் ஆண்டில் மியூசிக் ஸ்டிரீமிங் $55 பில்லியனை எட்டும் என்றும் சேட்டர்ஜி கணித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள்

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் மியூசிக் தளத்தில் ஏராளமான இசை, பாடல்கள் கொட்டிக் கிடப்பதை அடுத்து அந்நிறுவனத்திற்கு சந்தாதாரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதேபோல் கேமிங் துறையிலும் அந்நிறுவனம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் மியூசிக் மற்றும் கேமிங் தளத்தின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றும் கருத்துக் கணிப்பில் இருந்து தெரியவந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Apple music, gaming to bring in over $8 billion in revenue by 2025, JP Morgan says

Apple music, gaming to bring in over $8 billion in revenue by 2025, JP Morgan says | ஆப்பிளுக்கு நாம தரப்போக்கும் $8 பில்லியன் வருமானம்: எப்படி தெரியுமா?

Story first published: Tuesday, June 14, 2022, 9:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.