உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்தவர் என்ற சாதனையை பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் படைத்துள்ளார்.
பிரித்தானியாவில் மகாராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை, பிளாட்டினம் ஜூபிலி ஆண்டாக ராயல் அரண்மனை கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில் இரண்டாம் எலிசபெத் வரலாற்று சாதனை படைத்துள்ளார். பிரித்தானியா ராச்சியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி இரண்டாம் எலிசபெத் தான்.
மேலும் 63 ஆண்டுகள் பிரித்தானியாவை ஆட்சி புரிந்த விக்டோரியா மகாராணியின் சாதனையை முறியடித்து, பிரித்தானிய வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்துள்ளார்.
Photo Credit: Getty Images
அதேபோல் நீண்ட காலமாக ஆட்சி செய்த தாய்லாந்து அரசர் பூமிபால் அதுல்யதேஜின் சாதனையை முறியடித்து, உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் அல்லது மகாராணி என்ற சாதனையை படைத்த இரண்டாவது நபர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.
கடந்த 1952ஆம் ஆண்டு, தனது 25வது வயதில் ராணி இரண்டாம் எலிசபெத் பிரித்தானியாவின் மகாராணியாக முடிசூட்டிக் கொண்டார். அந்த நிகழ்வு தான் உலகளவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட முதல் பிரம்மாண்ட நிகழ்வு ஆகும்.
Photo Credit: Karwai Tang—WireImage/Getty Images
பிரான்ஸ் மன்னர் 14ஆம் லூயிஸ் 1643-1715 காலகட்டம் வரை 72 ஆண்டுகள், 110 நாட்கள் அரசராக இருந்தது இதுவரை மிகப்பெரிய சாதனையாக உள்ளது.