ஆதி காலத்தில்,நமது மக்கள் ஒன்றிணைந்து, இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டதன் காரணமாகவே சவால்களில் வெற்றி பெற்றனர்

ஆதி காலத்தில், நமது மக்கள் ஒன்றிணைந்தும் மற்றும் பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையிலும் செயற்பட்டதன் காரணமாகவே சவால்களில் வெற்றி பெற்றனர் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

 

பொசன் நோன் மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள தின வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ விடுத்துள்ள பொசன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

பொசன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி

புதிய அர்த்தமுள்ள அடையாளத்தையும் கலாசார மறுமலர்ச்சியையும் உருவாக்கிய, மஹிந்த தேரரின் வருகை இடம்பெற்ற பொசன் நோன்மதி தினம் என்பது இலங்கையில் நாம் என்றென்றும் கௌரவத்துடன் நினைவுகூரக்கூடிய ஒரு பெறுமதியான நாள் ஆகும்.

புத்த பெருமானால் போதிக்கப்பட்ட புனித தர்மத்தை இந்நாட்டில் ஸ்தாபித்ததன் மூலம், மஹிந்த தேரர், அதுவரை இருந்த இலங்கைப் பண்பாட்டை அர்த்தத்துடனும், தர்மத்துடனும் போசித்தார்.

மகிந்த தேரர் சுட்டிக் காட்டிய பாதை, தேசத்தின் முன்னேற்றத்திற்காகப் போதித்த தர்மம் ஆகும். அதேபோன்று தனிநபரின் ஆன்மீக வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டது. அந்தப் போதனைகளைத் தழுவிய பழங்கால  இலங்கை, பெருமையுடன் இருந்ததாக  வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

மக்களை மையமாகக் கொண்ட இலக்கின் வெற்றிக்கு அனைவரின் ஒற்றுமை, ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பு அவசியம். ஆதி காலத்தில், நமது மக்கள் ஒன்றிணைந்தும் மற்றும் பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையிலும் செயற்பட்டதன் காரணமாகவே சவால்களில் வெற்றி பெற்றனர்.

நுண்ணறிவு, புத்திசாலித்தனம், நெகிழ்வுத்தன்மை, இறையச்சம், புத்தாக்கச் சிந்தனை மற்றும் இயற்கையின் மீதான நம்பிக்கை ஆகியவை சமூகத்தின் பொது நலனுக்கு காரணமாக அமையும் என்று மஹிந்த தேரர் எமக்குப் போதித்தார். பௌத்தம் அறிவொளியின் சாரத்தைக் கற்பிக்கிறது. ஐம்புலன்களினால் உள்ளம் ஏமாற இடமளிக்கக் கூடாது. தர்மத்தைத் தேடினால்தான் உண்மையைக் காணமுடியும்.

புத்த பெருமான் போதித்த தர்மத்தை நாம் புரிந்துகொண்டு, இந்த பொசன் நோன்மதி தினத்தில், உடல் ஆரோக்கியத்திற்காகவும்  இவ்வுலக நலன்களுக்காகவும் செயற்படுவதற்கு நாம் உறுதிபூணுவோம். அதற்காக அனைவருக்கும் நல்லெண்ணங்கள் மேலோங்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.

கோட்டாபய ராஜபக்க்

 2022 ஜூன் மாதம் 13ஆம் திகதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.