தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்று சர்வதேச சந்தையில் சற்று சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது வலுவடைந்து வரும் நிலையில், தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது.
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த மானிட்டரி கொள்கைகள் கைகொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படும் நிலையில், மீடியம் டெர்மில் இன்னும் குறையலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் வாங்க ரெடியா.. இன்று விலை எப்படியிருக்கு தெரியுமா.. சென்னையில் என்ன நிலவரம்?
தங்கத்திற்கு ஆதரவு
அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை கட்டாயம் அதிகரிக்கலாம் என்ற நிலையில், தங்கம் விலையானது தொடன்ர்து சரிவினைக் கண்டு வருகின்றது. குறிப்பாக தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் அனைத்தும் சரிவினைக் கண்டு வருகின்றன. இது மேற்கொண்டு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 தசாப்தங்களில் இல்லாத அளவு ஏற்றம்
அமெரிக்க பத்திர சந்தையும் இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றத்தில் காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களாகவே பங்கு சந்தைகளிலும் பெரும் ஏற்ற இறக்கம் காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலை குறைந்தாலும், மீண்டு வர இது வழிவகுக்குமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
சரிவில் தங்கம் & வெள்ளி விலை
தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் பத்திர சந்தை, டாலரின் மதிப்பானது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது. இதற்கிடையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.80 டாலர்கள் குறைந்து, 1828 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளியின் விலையும் 0.34% குறைந்து, 21.183 டாலராகவும் வர்த்தகமாகி வருகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கம் விலை இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4,843 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 38,744 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று மாற்றமின்றி காணப்படுகின்றது. இது கிராமுக்கு 5283 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 42,264 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையும் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 67.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 673 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 67,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
gold prices reaches 4 week low amid strong US dollar
The price of gold is declining in the international market today. So what is the price of jewelry gold?