ரஷ்யப்படையினர், காபி கப்களுக்குள் கையெறிகுண்டுகளை வைத்து அவற்றை ட்ரோன்கள் மூலம் வீசியது தெரியவந்துள்ளது.
அதற்குக் காரணம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த அதிநவீன கருவிகள் இல்லாததாலா என்பது உறுதியாக தெரியவில்லை.
கிழக்கு உக்ரைனிலுள்ள Marinka என்ற நகரில், உக்ரைன் வீரர்கள் இரண்டு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியபோது இந்த உண்மை தெரியவந்தது.
மட்டமாக, காபி கப்களுக்குள் கையெறிகுண்டுகளை வைத்து, அவற்றை நூலால் கட்டி, அதை ட்ரோனுடன் இணைத்து பறக்கவிட்டுள்ளனர் ரஷ்யப்படையினர்.
News Group Newspapers Ltd
ஆனால், அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ, அந்த குண்டுகள் வெடிக்கவில்லை.
விடயம் என்னவென்றால், இந்த குறிப்பிட்ட வகை ட்ரோன்களால் அதிக உயரம் பறக்க முடியாது.
ஆகவே, அவற்றை எங்களால் எளிதில் சுட்டு வீழ்த்திவிடமுடியும் என்கிறார்கள் உக்ரைன் வீரர்கள்.