Sri Lanka clears projects linking Jaffna with Tamil Nadu, Puducherry: பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில், இலங்கையின் வடமேற்கில் காற்றாலை ஆற்றல் திட்டத்திற்கான அதானி குழுமத்தின் முன்மொழிவை இலங்கை முன்வைத்ததாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எதிரொலித்த ஒரு நாளில், இலங்கை அமைச்சரவை நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இரண்டு இணைப்புத் திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டியது. யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு விமான சேவை, மற்றும் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையிலிருந்து புதுச்சேரியில் காரைக்காலுக்கு ஒரு படகு சேவை.
நீண்ட உள்நாட்டுப் போரின் முக்கிய இடமான இலங்கையின் தமிழ் வடக்கு பகுதியில், மீட்பு மெதுவாக இருக்கும் நிலையில், அப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பங்களிக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே அதிக மக்கள் தொடர்புகளை உருவாக்க, இந்த இணைப்புத் திட்டங்கள் நீண்ட காலமாக இந்தியாவின் விருப்பப்பட்டியலின் ஒரு பகுதியாகும். இலங்கையைப் பொறுத்தவரை, தென்னிந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் அதன் நெருக்கடியான பொருளாதாரத்திற்கு மதிப்புமிக்க அந்நிய செலாவணியை பங்களிக்க முடியும்.
இதையும் படியுங்கள்: வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து பாடம் கவனித்த ஸ்டாலின்; அரசுப் பள்ளியில் ஆய்வு
தமிழ்நாடு மற்றும் வட இலங்கை இடையே போக்குவரத்து இணைப்புகளை புதுப்பிக்கும் யோசனை 2009 இல் போர் முடிவடைந்த பின்னர் முன்வைக்கப்பட்டது, ஆனால் கொழும்பில் இருந்து பதில் மெதுவாக இருந்தது. முன்னதாக, 1970 கள் வரை விமானங்கள் மற்றும் படகு சேவை இருந்தது. 2019 நவம்பரில் தான், முன்னர் இராணுவ விமானநிலையமாக இருந்த பலாலி விமான நிலையம், அலையன்ஸ் ஏர் மூலம் இயக்கப்படும் வாரத்திற்கு மூன்று முறை யாழ்ப்பாணம்-சென்னை ஏடிஆர் விமானங்களுடன் முதல் முறையாக சர்வதேச சிவிலியன் விமானங்களுக்கு திறக்கப்பட்டது. இருப்பினும், தொற்றுநோய்க்கு மத்தியில் விமான நிலையம் சில மாதங்களில் மூடப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, இந்த இரண்டு புதிய இணைப்புகளும் தென்னிந்தியாவில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான பயணிகளை வட இலங்கையில் கோவில் சுற்றுலாவிற்கு அழைத்து வரும் என்றார்.
“முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. படகு சேவை தொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சர் முன்மொழிவை ஆய்வு செய்து, ஜனாதிபதியிடம் ஒப்படைப்பார். இது அடுத்த மாதத்திற்குள் தொடங்கும்,” என்று தேவானந்தா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
மேலும், விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டதும், இமிக்ரேசன் மற்றும் சுங்கச் சாவடிகள் விமான நிலையத்தில் புத்துயிர் பெற்றவுடன் விமான சேவை தொடங்கும், என்றும் அவர் கூறினார். மன்னார் – இராமேஸ்வரம் வரையிலான படகுச் சேவைக்கான யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், காங்கேசன்துறை – காரைக்கால் படகுச் சேவைக்கு மாத்திரமே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ராமேஸ்வரத்திற்கான படகு சேவைக்கு போதுமான உள்கட்டமைப்பு இல்லை என்றாலும், காரைக்காலில் பெரிய சரக்கு துறைமுகம் உள்ளது. இருப்பினும், காரைக்கால் துறைமுகத்தின் தனியார் விளம்பரதாரரான மார்க் லிமிடெட், கடன் வழங்குபவருக்கு ரூ.2,400 கோடி திருப்பிச் செலுத்தத் தவறியதால், திவால் நடவடிக்கைக்கு சமீபத்தில் மனு தாக்கல் செய்தது.
கடந்த நவம்பரில், காரைக்கால் துறைமுகத்தில் வைத்திருந்த ரூ.2,059 கோடி கடனையும், 11 சதவீத ஈக்விட்டியையும் ஓம்காரா ஏஆர்சிக்கு எடெல்விஸ் விற்றது.
காரைக்கால் வாரியத்திற்கு ஓம்காராவால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு நபர்கள் அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் CFOவுமான அமீத் தேசாய் மற்றும் ஓய்வுபெற்ற பஞ்சாப் கேடர் ஐஏஎஸ் அதிகாரியும், அதானி அக்ரி லாஜிசிட்ஸ் லிமிடெட் முன்னாள் இயக்குநருமான சுரேந்தர் குமார் துதேஜா. காரைக்கால் துறைமுகத்தை அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கையகப்படுத்துவதற்கு அவர்களின் பரிந்துரை வழி வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.