மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்திலுள்ள தேசிய பூங்காவில் அரிய வகை டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேச்சர் குரூப் என்ற இதழிலில் வெளியாகியுள்ள கட்டுரையில், டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள 52 டைனோசர் கூடுகளில், ஒவ்வொரு கூட்டில் 10 முட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பு டைனோசரின் இனப்பெருக்கம், கூடு கட்டும்முறை உள்ளிட்டவை குறித்த ஆராய்ச்சிகளுக்கு உதவும் என்றும் கூறியுள்ளனர்.