இந்தியா நெட் ஜீரோ இலக்கை அடைய அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வரும் நிலையில் பசுமை மின்சாரம், பசுமை எரிவாயு ஆகியவற்றுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்நிலையில் இத்துறையில் புதிய வர்த்தக வாய்ப்புகள் நிறைய உருவாகியுள்ள நிலையில் இந்தியாவின் பெரும் வர்த்தகக் குழுமங்கள் குழாயடி சண்டைக்கு இணையாகப் போட்டிப்போட்டு இத்துறையில் இறங்கி வருகிறது.
இந்தியாவின் இரு பெரிய பணக்காரர்களான அம்பானி, அதானி வேறு வேறு துறையில் இயங்கி வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்தில் இருவரும் பல துறையில் இணைந்து போட்டிப்போடத் துவங்கியுள்ளனர்.
டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் நிறுவனங்களின் முடிவு என்ன.. ஒர்க் பிரம் ஹோம் தொடருமா?
கௌதம் அதானி
உலகிலேயே மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜென் தளத்தை உருவாக்கும் மாபெரும் திட்டத்திற்காகக் கௌதம் அதானி-யின் அதானி எண்டர்பிரைசர்ஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டின் டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்துடன் கூட்டணி உருவாக்கியுள்ளது.
அதானி எண்டர்பிரைசர்ஸ்
இந்த ஒப்பந்தம் படி அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சுமார் 25 சதவீத பங்குகளைப் பிரான்ஸ் நாட்டின் டோட்டல் எனர்ஜிஸ் வாங்க உள்ளது.
டோட்டல் எனர்ஜிஸ்
இப்புதிய கூட்டணி 2030 ஆம் ஆண்டுக்குள் 1 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜென் வாயுவை உற்பத்தி செய்வதை முக்கிய இலக்காகக் கொண்டு உள்ளது. இந்தியாவில் இதுவரை எந்தொரு நிறுவனமும் இதுவரையில் அறிவிக்காத அளவீடாக இருக்கும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் பல முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதானி – டோட்டல் கூட்டணி
அதானி மற்றும் டோட்டல் கூட்டணியில் ஏற்கனவே எல்என்ஜி டெர்மினல், கேஸ் யூடிலிட்டி வர்த்தகம், ரினியூவபிள் வர்த்தகம் ஆகியவை இருக்கும் நிலையில், தற்போது புதிதாகக் கிரீன் ஹைட்ரஜென் உற்பத்தி வர்த்தகமும் இணைந்துள்ளது.
முகேஷ் அம்பானி
இதேபோல் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ள 75 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தில் முக்கியப் பங்கு ஹைட்ரஜென் வாயுவை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அம்பானி, அதானி ஓரே துறையில் போட்டிப்போடும் நிலை உருவாகியுள்ளது.
French Total Energies to acquire 25 percent stake in Adani New Industries for green hydrogen biz
French Total Energies to acquire 25 percent stake in Adani New Industries for green hydrogen biz. Adani New Industries will develop a green hydrogen production capacity of 1 million tons per annum before 2030.