பொசன் நோன்மதி தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு இலங்கையின் பல பகுதிகளிலும் முக்கிய பௌத்த வழிபாட்டு தலங்களில் விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
விகாரைகளில் பல்வேறு தான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் அசோக சக்கரவர்த்தியின் மகனான அரகாத் மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்து பௌத்த போதனைகளை வழங்கிய முதல் நாளாக இந்த நாள் கருதப்படுகின்றது. அதுமாத்திரமின்றி பௌத்த மதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட தினமே பொசன் தினமாகவும் குறிப்பிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
மகிந்த தேரர் முதன் முதலில் இலங்கைத் தீவில் காலடி பதித்து பௌத்தமத சிந்தனையை அறிமுகப்படுத்தினார்.
அனுராதபுரம் மிஹிந்தலை மலையுச்சியில் வைத்தே மஹிந்த தேரர் இந்த பௌத்த சித்தாந்தத்தின் முதல் போதனையை அந்தக் காலத்தில் இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பியதீன் மன்னருக்கு வழங்கினார்.