இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இதன் காரணமாக வங்கிகளில் லோன் வாங்கியவர்களுக்கான வட்டி விகிதம் உயரும் என்பது தெரிந்ததே.
அதே நேரத்தில் வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கும் வட்டி அதிகம் கிடைக்கும் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
ரிசர்வ் வங்கி வட்டி உயர்வால் கலங்கி நிற்கும் அம்பானி, அதானி, டாடா.. ஏன்..?
ரெப்போ வட்டி
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்திய பின்னர் பல வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது.
எஸ்பிஐ
அந்த வகையில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியும் இன்று முதல் பிக்சட் டெபாசிட்டுக்களுக்கு வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது.
பிக்சட் டெபாசிட் வட்டி
2 கோடி ரூபாய்க்குள் பிக்சட் டெபாசிட்டுக்களில் முதலீடு செய்யும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி கணிசமாக வட்டியை உயர்த்தியுள்ளது என்பதும், குறிப்பாக சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் அதிகம்
இன்று முதல் எஸ்பிஐ வங்கியின் உயர்த்தப்பட்ட புதிய டெபாசிட் வட்டி விகிதம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
7 – 45 நாட்கள் : 2.90% ( இதற்கு முன்னர் 2.9%)
46 – 179 நாட்கள் : 3.90% ( இதற்கு முன்னர் 3.90% )
180 – 210 நாட்கள் : 4.40% ( இதற்கு முன்னர் 4.4% )
211 நாட்கள் – 1 ஆண்டு : 4.60% ( இதற்கு முன்னர் 3.40% )
1 ஆண்டு – 2 ஆண்டு : 5.3% ( இதற்கு முன்னர் 5.10% )
2 ஆண்டு – 3 ஆண்டு : 5.35% ( இதற்கு முன்னர் 5.25% )
3 ஆண்டு – 5 ஆண்டு : 5.45% ( இதற்கு முன்னர் 5.45% )
5 ஆண்டு – 10 ஆண்டு : 5.50% ( இதற்கு முன்னர் 5.50% )
சீனியர் சிட்டிசன்கள்
மேற்கண்ட வட்டி விகிதங்களில் இருந்து சீனியர் சிட்டிசன்களுக்கு 0.50% அதிகம் வழங்கப்படும். சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம் இதோ:
- 7 – 45 நாட்கள் : 3.40%
- 46 – 179 நாட்கள் : 4.40%
- 180 – 210 நாட்கள் : 4.90%
- 211 நாட்கள் – 1 ஆண்டு : 5.10%
- 1 ஆண்டு – 2 ஆண்டு : 5.80%
- 2 ஆண்டு – 3 ஆண்டு : 5.85%
- 3 ஆண்டு – 5 ஆண்டு : 5.95%
- 5 ஆண்டு – 10 ஆண்டு : 6.30%
SBI ups retail and bulk term deposit rates by 15-75 bps
SBI ups retail and bulk term deposit rates by 15-75 bps | இன்றே பி்க்சட் டெபாசிட் செய்ய போங்க: தாறுமாறாக வட்டியை உயர்த்திய எஸ்பிஐ