ரஷ்ய ஜனாதிபதி புடின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் யாருக்கும் தெரியாத ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நூறு நாட்களை கடந்து உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உக்ரைன் போருக்கு இடையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மிகவும் தனியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அவர் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதன்படி புடினுக்கு புற்றுநோய், பார்கின்சன் போன்ற பாதிப்புகள் இருக்கலாம் என தொடர்ந்து தகவல்கள் வருகின்றது.
புடினின் உடல் நிலை குறித்த பல்வேறு செய்திகள் வரும் நிலையில்தான், அவரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.
அதன்படி புடின் வெளிநாடு செல்லும் போது, அவரின் பாடிகார்ட்ஸ் 6 பேர் அவர் கழிப்பறை செல்லும் இடங்களில் எல்லாம் உடன் செல்வார்கள் என்று தெரியவந்துள்ளது.
அதாவது புடினின் மலம் மற்றும் சிறுநீரை எடுக்கவே அவர்கள் செல்வார்கள் என கூறப்படுகிறது.
So I’m counting 6 people accompanying Vladimir Putin to the toilet… pic.twitter.com/BjG5N5IpDR
— Jonah Fisher (@JonahFisherBBC) December 9, 2019
வெளிநாடுகளில் புடினின் மலத்தை வைத்து உளவாளிகள் யாரும் அவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட கூடாது. அவருக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்று கண்டுபிடித்துவிட கூடாது என்பதால் சிறுநீர், மலத்தை 6 பேர் எடுத்து, அதை பார்சல் செய்து, ரஷ்யாவிற்கு அனுப்பிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
புடின் எங்கும் தனது ‘தடங்களை’ விட்டுவிடாமல் எல்லாவற்றையும் இந்த தாய்நாட்டிற்கு கொண்டு செல்வதை உறுதிசெய்ய இப்படி செய்யப்பட்டது.
2017ல் புடின் பிரான்ஸ் சென்ற போதும், பின்னர் சவுதி போன்ற நாடுகளுக்கு சென்ற போதும் அவருடன் கழிப்பறைக்குள் 6 பேர் வரை சென்றனர். இதில் கழிப்பறையில் இருந்து சிறிய சூட்கேஸ் ஒன்று வெளியே கொண்டுவரப்பட்டது.
ஒவ்வொருமுறையும் அவர் வெளிநாட்டில் கழிப்பறைக்கு செல்லும் போது இப்படி சூட்கேஸ் கொண்டு வரப்படுவது வழக்கமாகி உள்ளது.
இது தொடர்பான ஆதார வீடியோவும் வெளியாகியுள்ளது.