46வது தேசிய வயதுப் பிரிவு நீச்சல் சம்பியன்ஷிப்- 2022 போட்டியிடும் இலங்கை இராணுவத்தின் வீரர்கள் பல பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன் ஒரு புதிய தேசிய சாதனையை யும் படைத்துள்ளனர்.
கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் இம்மாதம் (ஜூன்) 8 முதல் 11 வரை நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ கஜபா படைப்பிரிவின் 2வது லெப்டினன்ட் எச்.டி.ஏ.பீரிஸ் 50 மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியை 26.24 வினாடிகளில் முடித்து ஒரு புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.
இதேவேளை 5 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களுடன் 2 (V) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியள் படையணியின் பிரைவேட் ஆர். ஜி. ஏ.கருணாநாயக்க சிறந்த ஆண்கள் திறந்த நீச்சல் வீரருக்கான பட்டத்தை வென்றார் என இராணுவ ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை இராணுவ அணி, ஆண்கள் பிரிவில் 16 தங்கம், 13 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களையும், இராணுவப் பெண் நீச்சல் வீரர்கள் 01 தங்கம், 04 வெள்ளி மற்றும் 01 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அமைச்சு