நாளை நண்பகல் தொடக்கம் மீண்டும் எரிவாயு விநியோகம் நடைபெறும் என்று லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த எட்டாம் திகதி 3900 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்திருந்த கப்பலுக்கான 2.5 மில்லியன் டொலர் நிலுவைத் தொகை மற்றும் தாமதக் கட்டணம் என்பன இன்று காலை லிட்ரோ நிறுவனத்தினால் செலுத்தப்பட்டுள்ளது.
டொலர் பற்றாக்குறை காரணமாகக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகக் குறித்த கப்பல் ஒருவாரமாக கொழும்புத்துறைமுக கடற்பரப்பில் தரித்து நிற்க நேர்ந்திருந்தது.
கப்பலிலிருந்து எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பம்
இந்நிலையில் இன்று பிற்பகல் தொடக்கம் கப்பலிலிருந்து எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் சுமார் 11 நாட்களின் பின் நாளை மதியம் தொடக்கம் மீண்டும் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க முடியும் என்றும் லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.