தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நெப்போலியன். 1963-ம் ஆண்டு திருச்சியில் பிறந்த இவர் பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகப்படத்திலேயே இளம் நடிகரான நெப்போலியன் வயதான தோற்றத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார்.
மேலும் புது நெல்லு புது நாத்து படத்தை பார்த்த இயக்குநர் இமயம் பாலச்சந்தர் நெப்போலியன் வயதான கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளதாக பெரிய பாராட்டுக்களை தெரிவித்ததாக நெப்போலியன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பல படங்களில் சப்போர்டிங் ரோலில் நடித்து வந்த இவர் எஜமான் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.
அதன்பிறகு பல படங்களில் சோலோ நாயகனாக உருவெடுத்த நெப்போலியன் 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் கமலின் விருமாண்டி படத்திற்காக பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம், கன்னடா மற்றும் ஆங்கில படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமல்லாது அரசியலிலும் கால்பதித்த நெப்போலியன் 1980-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்துள்ளார். திமுவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கே.என்.நேரு இவரின் மாமா. அதன்பிறகு 2014- திமுகவின் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
தமிழில் கடைசியாக அன்பறிவு படத்தில் நடித்திருந்த நெப்போலியன் படப்பிடிப்பு நேரத்தில் மட்டும் இந்தியாவிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் இந்நிலையில், அமெரிகாவில் சொந்தமாக நிலம் வாங்கியுள்ள நெப்போலியன் அதில் விவசாயம் செய்து வருகிறார். தற்போது தனது விவசாய தோட்டத்தில் அருகில் இருந்து நெப்போலியன் பதிவிட்டுள்ள வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
Naan America Vivasaayi #Nepolean pic.twitter.com/MHWGSwL9Rd
— chettyrajubhai (@chettyrajubhai) June 13, 2022
ஒரு சில நடிகர்கள் தங்களது சம்பளத்தின் ஒரு பகுதியை விவசாயத்திற்கு செலவு செய்து வரும் நிலையில், நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆனாலும் தனது குலத்தொழிலான விவசாயத்தை தொடர்ந்து செய்து வருவது பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது இதிலும் அந்த வீடியோவில் தான் அமெரிக்க விவசாயி என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietami