மனிதாபிமான உதவியின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள அரிசித் தொகையின் முதல் தொகுதி கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்த அரிசித் தொகை எதிர்வரும் சில தினங்களுக்குள் இலq;கைக்கு கிடைக்கும். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணும் நோக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சீனா வழங்கும் ஐம்பது கோடி யுவான் மனிதாபிமான நிதியுதவி மூலம் இலங்கைக்குத் தேவையான ஒரு தொகை மருந்துகள் கடந்த தினம் கிடைக்கப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.