உதகையில், போலீசாரின் விசாரணைக்கு பயந்து கல்லூரி இளைஞர் உள்பட 4 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.
உடல்நலக்குறைவு காரணமாக இத்தலார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற பானுப்பிரியாவுக்கு சிகிச்சையளிக்க தாமதமான நிலையில், அதுகுறித்து செவிலியருடன் பெண்ணின் உறவினர்கள் 4 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
செவிலியர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களை விசாரணைக்கு அழைத்த நிலையில், மன உளைச்சல் அடைந்த 4 பேரும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.
காவல்துறையினர் இரு தரப்பினரிடையே விசாரணை மேற்க்கொள்ளாமல், தங்கள் மீது வழக்குப் பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது என பானுப்பிரியா மற்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.