சொன்னதை செய்த எலான் மஸ்க்.. சிங்கப்பூர் உயர் அதிகாரி திடீர் பணிநீக்கம்..!

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டிவிட்டர்-ஐ கைப்பற்றும் வேலையில் பிசியாக இருந்தாலும் டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான முடிவுகளை அவ்வப்போது எடுத்து வருகிறார்.

அப்படி எலான் மஸ்க் எடுத்த முக்கியமான முடிவு தான் 10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம், வொர்க் பரம் ஹோம்-க்கு முடிவு…

இதில் 10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் என்பது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கும் என நினைத்த பலருக்கு, அதிர்ச்சி அளிக்கும் வகையில் சிங்கப்பூர் உயர் அதிகாரியை திடீரெனப் பணிநீக்கம் செய்துள்ளார்.

டெஸ்லா

டெஸ்லா நிறுவனத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு பணியில் சேர்ந்த சிங்கப்பூர் நாட்டு வர்த்தகத்தின் உயர் தலைவர் எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கிறிஸ்டோபர் போசிக்ஸ் இதற்கான விளக்கத்தைத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் நாட்டின் டெஸ்லா வர்த்தகத்தின் மேனேஜர் ஆன கிறிஸ்டோபர் போசிக்ஸ் தனது லிங்க்ட்இன் பதிவில் “தென்கிழக்கு ஆசியாவில் டெஸ்லாவின் முதல் நாட்டு மேலாளராக இருந்ததில் பெருமைப்படுகிறேன்” என்று எழுதியுள்ளார்.

கிறிஸ்டோபர் போசிக்ஸ்

கிறிஸ்டோபர் போசிக்ஸ்

கடந்த ஒரு ஆண்டில், சிங்கப்பூரில் டெஸ்லா நிறுவனத்திற்கான வர்த்தகத்தை அடிமட்டத்தில் இருந்து உருவாகி, இந்நாட்டுக் கார் சந்தையில் மாடல் 3 அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராகவும், முக்கியக் காராகவும் வர்த்தகத்தை மேம்படுத்தப்பட்டது.

லிங்கிடுஇன் பதிவு
 

லிங்கிடுஇன் பதிவு

இதுபோக 2 டெஸ்லா ஷோரூம்கள், 1 டெஸ்லா சர்வீஸ் சென்டர் ஆகியவற்றை அமைத்தோம். சிங்கப்பூர் தீவு முழுவதும் 7 சூப்பர்சார்ஜர்களின் நெட்வொர்க், மற்றும் மாடல் Y அறிமுகம் செய்யப்பட்டது எனப் பெருமை உடன் கிறிஸ்டோபர் போசிக்ஸ் இந்த லிங்கிடுஇன் பதிவை செய்துள்ளார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

சில வாரத்திற்கு முன்பும் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் அனைத்து ஊழியர்களையும் உடனடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிட்டு உள்ளார். இல்லையெனில் வேலையை விட்டு வெளியேறும் படி அறிவித்துள்ளார்.

Work From Home கட்

Work From Home கட்

வீட்டில் இருந்து பணியாற்றும் டெஸ்லா ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வந்து வாரத்தில் குறைந்தது 40 மணிநேரம் பணியாற்றி இருக்க வேண்டும் இல்லையெனில் பணியை விட்டு வெளியேறலாம் என எலான் மஸ்க் எச்சரித்தார்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இதைத் தொடர்ந்து எலான் மஸ்க், டெஸ்லா ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், எனக்குப் பொருளாதாரம் குறித்துத் தவறாகத் தோன்றுகிறது. இந்தப் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து தப்பிக்க டெஸ்லா நிறுவனத்தின் இருந்து 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டும் நிலை வரலாம் என்று கூறினார்.

புதிய வேலைவாய்ப்பு

புதிய வேலைவாய்ப்பு

மேலும் டெஸ்லா நிர்வாகத்திடம் அனைத்து பிரிவுகளிலும் உலக நாடுகள் அனைத்திலும், புதிதாக வேலைக்கு ஆட்களைச் சேர்க்கும் பணிகளை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தான் சிங்கப்பூர் உயர் அதிகாரியான கிறிஸ்டோபர் போசிக்ஸ் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tesla CEO Elon Musk fires Singapore top executive after warning of 10 percent job cuts

Tesla CEO Elon Musk fires Singapore top executive after warning of 10 percent job cuts சொன்னதைச் செய்த எலான் மஸ்க்.. சிங்கப்பூர் உயர் அதிகாரி திடீர் பணிநீக்கம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.