வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதி மக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்களின் படி, நலத்திட்ட உதவிகளை வருகிற 21 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவிருப்பதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் வருகை சம்பந்தமான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு அதற்கேற்றால் போல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
கூட்டுறவு சங்கங்களின் பதவி காலத்தை மூன்றாண்டுகளாக குறைக்கும் தீர்மானம் மூன்று முறை நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநர் இதுநாள் வரை கையொப்பமிடவில்லை என்றும் எதிர்க்கட்சியினரே அப்பதவிகளில் உள்ளதால் தமது கட்சிகாரர்கள் வயிறு எரிகின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.