அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது அதன் வரலாறு காணாத சரிவினை எட்டிய நிலையில், இன்று சற்றே மீண்டுள்ளது. எனினும் இந்த மீள்ச்சி நிரந்தரமல்ல. இனியும் சரியலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தொடர்ந்து உள்நாட்டு பங்கு சந்தைகள் சரிவு, தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் கச்சா எண்ணெய் விலை, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு ஏற்றம் என பல காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டு வருகின்றது.
எப்போது வேண்டுமானாலும் சரியலாம்?
தொடர்ந்து பணவீக்கம் உச்சம் எட்டி வரும் நிலையில், அதனை கட்டுக்குள் வைக்க மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதற்கிடையில் ஏற்கனவே 20 வருட உச்சத்தினை எட்டிய நிலையில், இனியும் ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டுள்ளது. இனி எப்போது வேண்டுமானாலும் சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ரூபாய் சரிவு
வங்கிகளுக்கு இடையிலான அன்னிய செலவாணி சந்தையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 78.03 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்ட்ராடேவில் 77.90 – 78.09 ரூபாயாகவும் வர்த்தகமாகியது. இது கடந்த அமர்வில் 78.29 ரூபாயாக சரிவினைக் கண்டிருந்தது.
யெஸ் வங்கி கணிப்பு
இது குறித்து யெஸ் வங்கி, வளர்ந்து வரும் சந்தைகளிலும் பணவீக்கம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். இதற்கிடையில் டாலரின் மதிப்பும் உச்சத்தில் உள்ளது. பணவீக்கத்தின் மத்தியில் தேவையும் சரிவினைக் காணலாம். இது மேற்கொண்டு வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ரூபாயின் மதிப்பு நடப்பு ஆண்டில் 79 – 79.50 ரூபாய் வரையில் வீழ்ச்சி காணலாம் என யெஸ் வங்கி கணித்துள்ளது.
இன்னும் வீழ்ச்சி காண வழிவகுக்கலாம்
ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் பணவீக்கம் மேற்கோண்டு இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கி உள்ளிட்டவை வரவிருக்கும் கூட்டத்தி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இசிபி மாதாந்திர சொத்து வாங்குதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
indian Rupee may fall to 80 per US dollar
Although the Indian rupee has begun to appreciate slightly against the dollar, experts predict that it may fall further.