கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை பத்து ரூபாய்க்கு திரும்பப்பெறும் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மலைப் பிரதேசங்களில், மது பாட்டில்களை வனப்பகுதிக்குள் தூக்கி வீசுவதால் பல்லுயிர் சூழலுக்கு கேடு விளைவதாக, தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் உயர்நீதி மன்றம், அதனை தடுக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என அரசுக்கு கேள்வி எழுப்பியது.
அதனை அடுத்து இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மற்றும் ஆத்தூர் தாலுகாவில் உள்ள சில மலை கிராமங்களில் இயங்கும், பத்து அரசு மதுபானக்கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால், பத்து ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என, ஆட்சியர் விசாகன் ஆணை வெளியிட்டுள்ளார்.
இந்த நடைமுறை நாளை முதல் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பத்து கடைகளில் அமலுக்கு வரும் எனவும், பொது மக்களுக்கு தகவல் அளித்துள்ளார். இந்த அறிவிப்பு இயற்கை சுற்றுச்சூழல் மீது ஆர்வம் மிகுந்தவர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM