இப்படியும் காட்டலாமா? தர்ஷாவிடம் ரசிகர்கள் கேள்வி
சின்னத்திரை நடிகையான தர்ஷா குப்தா சமூக வலைதளத்தின் கிளாமர் குயினாக வைரலாகி பெயர் பெற்றவர். சீரியல்கள், படங்கள் என தர்ஷாவின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக அவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்களும் முக்கிய காரணங்கள் என்றே சொல்லலாம். பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழகை காட்டும் தர்ஷாவின் புகைப்படங்களை இளசுகள் முதல் பெரிசுகள் வரை ஜொள்ளு வடித்துக் கொண்டு க்யூவில் நின்று பார்த்துக் கொண்டு வருகின்றனர்.
இடையில் சில நாட்கள் கிளாமாருக்கு கேப் விட்டிருந்த தர்ஷா தற்போது, புடவையை ஒரு தினுசாக கட்டி அழகு பளீச்சிட போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவே அதை பார்க்கும் நெட்டிசன்களோ 'புடவையை இப்படியும் கட்டி காட்டலாமா?' என டபுள் மீனிங்கில் கேள்வி கேட்டு வருகின்றனர்.