தன்னை பற்றிய செய்திகள் உலா வந்த நிலையில், நடிகர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களை நேரடியாக சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் சிகிச்சைக்காக அமெரிக்க சென்று சிகிச்சை பெற்றதாகவும், மீண்டும் அவர் அமெரிக்க செல்ல உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
அவர் நலம் பெற வேண்டும் ரசிகர்கள் வேண்டிக்கொண்டனர். மேலும், நலமுடன் திரும்பி வாருங்கள் என நடிகர் கமல்ஹாசனும் ட்வீட் செய்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை நேரில் சந்தித்த டி.ராஜேந்தர், தற்போது தான் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படுவதாகவும், தன்னை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பேட்டி அளித்தார்.
மேலும் பேசிய அவர், என் மீது ஊடகம் நம்பிக்கை வைத்துள்ளதால் சிகிச்சைக்கு முன் உங்களை சந்தித்து பேசிவிட்டு செல்லலாம் என வந்துள்ளேன்.
எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி கூற கடமைபட்டிருக்கிறேன். என்னை கமலஹாசன் நேரில் சந்தித்து சென்றார். அவருக்கு நன்றி.
அதேபோல் மருத்துவமனையில் என்னை நேரில் பார்த்து நம்பிக்கை அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கும், தம்பி உதயநிதிக்கும் நன்றி.
என் மகன் சிலம்பரசன் தான் என்னை வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொள்ள வற்புறுத்தினார்.
அவருக்காக தான் நான் அமெரிக்கா செல்கிறேன்.
நான் சென்று வந்துவிட்டு எல்லாவற்றிக்கும் பதிலளிக்கிறேன். எதுவும் என்னிடம் கேட்காதீர்கள், சொல்லக்கூடிய நிலையில் இல்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறேன். நன்றி’ என தெரிவித்துள்ளார்.