தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், 10.5 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தேனியில் ஐசக் தலைமையில் கிறிஸ்தவ மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த கிறிஸ்தவ மாநாடு, கிறிஸ்தவ மக்களின் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடைபெற்றது.
இதில்ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டுக்கு பேராயர் டாக்டர் வி.எஸ்.ஐசக் தலைமை ஏற்று பேசுகையில்,
“தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி.பட்டியலில் சேர்க்க வேண்டும். கிறிஸ்தவ மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தரவேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், கிறிஸ்தவ சிறுபான்மை நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், கிறிஸ்தவ தேவாலயங்கள் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்களுக்கு உருவாக்கியுள்ள நலவாரியத்தில் சாதி அடிப்படையில் பதவிகளை நியமிக்காமல், தகுதி அடிப்படையிலும் தரம் சார்ந்த அடிப்படையிலும் நியமிக்க வேண்டும் என்றும், தமிழக அரசை வி.எஸ்.ஐசக் வலியுறுத்தினார்.