உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் முன்னோடியாக இருக்கும் இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம் சிறப்பாக இருந்தாலும் இன்னும் பல கோடி பட்டதாரிகள் வேலைவாய்ப்புகள் இல்லாமலும், வறுமை கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்கள் தொகை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய ஐடி நிறுவனங்களின் சிஇஓ-க்களின் அதிகப்படியான சம்பளமும், ஊழியர்கள் மற்றும் சிஇஓ-க்களுக்கு மத்தியில் இருக்கும் அதிகப்படியான வித்தியாசம் பல கேள்விகளை எழுப்பியது.
ஆனால் இந்திய ஐடி நிறுவன சிஇஓ-க்களின் சம்பளம் சக வெளிநாட்டு நிறுவனங்களின் சம்பளத்தை ஒப்பிடும் போது மிகவும் குறைவாக உள்ளது என முணுமுணுத்து வருகின்றனர்.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் சிறப்பம்சம் என்ன.. பணியமர்த்தல், சம்பளம், சலுகைகள்?
தனிநபர் வருமானம்
2000 டாலர் மட்டுமே தனிநபர் வருமானமாகக் கொண்ட நாட்டில் ஒரு நிறுவனத்தின் சிஇஓ 10 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கினால் கேள்விகள் எழதானே செய்யும். இதேபோல் இந்த வருடம் ஐடி ஊழியர்கள் தங்களது சம்பள உயர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் சிஇஓ-க்களின் அதிகப்படிான சம்பளம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சிஇஓ
பொதுவாகச் சிஇஓ-க்களின் அடிப்படை சம்பளத்தைப் பார்க்கும் போது பெரிய அளவுகளில் இருக்காது, ஆனால் பெர்க்ஸ் அதாவது சலுகைகளை அதிதமாக இருக்கும். ஒரு சிஇஓ-வின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவர்களுக்கு அளிக்கப்படும் வேரியபிள் பே அளிக்கப்படும்.
சிஇஓ கடமை
இதைப் பெறுவதற்கு நிறுவனத்திற்கு அதிகப்படியான லாபம் அளிக்கும் திட்டங்களைக் கொண்டு வருவது அவர்களின் முக்கியப் பணியாக உள்ளது. இதேபோல் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை என்றால் வேரியபிள் பே பெறும் அளவீடு குறைக்கப்பட்டும். இதனால் எந்தச் சிஇஓ அதிகப்படியான சம்பளம் வாங்கினாலும் அது அவர்களின் வெற்றிக்காகக் கிடைத்தது.
அக்சென்சர் சிஇஓ
இந்நிலையில் உலகிலேயே மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் நிறுவன சிஇஓ ஜூலி ஸ்வீட் 23 மில்லியன் டாலரும், ஐபிஎம் சேர்மன் அரவிந்த் கிருஷ்ணா 17.56 மில்லியன் டாலரும், காக்னிசென்ட் சிஇஓ பிரையன் ஹம்ப்ரிஸ் 19.6 மில்லியன் டாலர் சம்பளத்தை 2021ல் பெற்றனர்.
விப்ரோ சிஇஓ சம்பளம்
இதைத் தொடர்ந்து இந்திய ஐடி நிறுவனங்களின் சிஇஓ-க்களின் சம்பளத்தைப் பார்ப்போம், விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்டே 10.5 மில்லியன் டாலரும், இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் 10.2 மில்லியன் டாலரும், டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் 3.32 மில்லியன் டாலர் மட்டுமே சம்பளமாய் பெற்றுள்ளனர்.
Indian IT companies CEO salary way to less compare with Accenture’s CEO Julie Sweet salary
Indian IT companies CEO salary way to less compare with Accenture’s CEO Julie Sweet salary சம்பளம் பத்தல சார்.. இந்திய ஐடி நிறுவன சிஇஓ-க்கள் புலம்பல்..!