தமிழகத்தில் நேற்று முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கிய நிலையில், பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த குழந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியில் பள்ளி தொடங்கிய முதல் நாளில் ஏராளமான மாணவச் செல்வங்கள் ஆர்வத்தோடு பள்ளிக்கு சென்ற நிலையில், அரசு உதவி பெறும் குருகுலம் பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த குழந்தையின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சக பெற்றோரும் சிறுவனை ஆறுதல் படுத்த முயன்றனர். தொடர்ந்து, மழலை மொழியில் பதில் அளித்த சிறுவன் ” அ-னா, ஆ-வான, அப்றம் ABCD எல்லாம் படிச்சிட்டேன்-னு பொய் சொல்லி அம்மாவை மாத்திடுவேன் ” என கூறியதால் அந்த இடமே சிரிப்பலையானது