சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 100 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜாங்கிரி-ஷம்பா மாவட்டம், பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல், கடந்த 10 ஆம் தேதி தனது வீட்டின் அருகேயுள்ள பயனற்ற ஆழ்துளை கிணற்றுள் தவறி விழுந்தான். சுமார் 60 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுவனை மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்பட பல குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
மீட்புக் குழுவினர், ஆழ்துளை கிணற்றின் அருகே மிகப்பெரிய சுரங்கம் தோண்டப்பட்டு அதன் வழியாக குழந்தையை மீட்டுள்ளனர். பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 100 மணி நேரத்துக்குப் பின்பு நேற்று நள்ளிரவில் ராகுல் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டான்.
அவனது உடல் நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM