தஞ்சையில் கஞ்சா அடிப்பதற்காக செல்போன் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதாக 14 வயது சிறுவன் ஒருவன் கூறியுள்ளான்.
சென்னையை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நேற்றிரவு காத்திருந்தார்.
அப்போது செல்போனில் பேசிக் கொண்டு இருந்த அவரிடம் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் 14 வயது சிறுவன் செல்போனை பறித்து கொண்டு ஓடினான்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் துரத்திச் சென்று சிறுவனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.