படப்பிடிப்பில் நடிகை தீபிகா படுகோனேவிற்கு லேசான நெஞ்சு வலி
பாலிவுட்டில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே தற்போது நடிகர் பிரபாஸ் ஜோடியாக ‛பிராஜெக்ட் கே' படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது திடீரென தீபிகா படுகோனேவிற்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் சோர்வடைந்த அவரை படக்குழுவினர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தபிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து தனது விடுதிக்குத் திரும்பியுள்ளார்.