அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று சென்னை: ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பெற்றது. மேலும், இந்த கூட்டத்தில் முடிவுகள் குறித்து தகவல் வெளியானவை, வரும் 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி இல்லை. அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சசிகலா ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் நுழைவதை தடுக்க அதிமுக தலைமை எந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை தலைமை ஏற்க கோரி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதங்கள் எழுந்த நிலையில், போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் தொண்டர்கள் விரும்பும், ஒற்றை தலைமையே, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியல் வாரிசு ஐயா ஓபிஎஸ் அவர்களே, கழகத்தை தலைமை ஏற்று வழி நடத்திட வாருங்கள் என அதிமுக ராமநாதபுரம் மாவட்ட தொண்டர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.