கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது தவறை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,
ஆதாரடங்களுடன் சொன்னால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். குறைகள் இருந்தால் அது களைபட்டிருக்கும். அதைவிடுத்து ஆதரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம். அண்ணாமலை கூறியதுபோல கர்ப்பிணிகளுக்கான ஊட்டசத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தம் அனிதா டெக்ஸ்கார்ட் நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை. பாலாஜி சர்ஜிக்கல் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஆதரமற்ற குற்றச்சாட்டை கூறியதற்காக அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.