ஒரே நிமிடத்தில் பணம் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புடன் பல ஆப்ஸ்கள் தற்போது இணையதளங்களில் உலா வருகின்றன.
இந்த ஆப்ஸ்களிடம் கடன் வாங்கும் அப்பாவி மக்கள் அதன்பிறகு படும் அல்லல்கள் சொல்லி மாளாது என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம்.
இந்த நிலையில் சட்டவிரோத கடன் வழங்கும் 600 ஆப்ஸ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எலான் மஸ்க் எடுத்த முடிவுக்கு அதிருப்தி: இந்தியாவின் முக்கிய அதிகாரி ராஜினாமா!
சட்டவிரோத ஆப்ஸ்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் கடந்த வாரம் சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ் குறித்து தனது கருத்தை வெளியிட்டிருந்தார். இந்திய ரிசர்வ் வங்கிக்கு சட்டவிரோத ஆப்ஸ்கள் குறித்து ஏராளமான புகார்கள் வருவதாகவும், ஆனால் அதே நேரத்தில் அந்த ஆப்ஸ்கள் இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படாதவை என்பதால் அதன் மீது ரிசர்வ் வங்கி நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
கண்காணிப்பு
ஆனால் அதே நேரத்தில் இதுபோன்ற மோசடிகள் குறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவுறுத்தி இருந்தார். இருப்பினும் இந்திய ரிசர்வ் வங்கி சட்டவிரோதமாக கடன் வழங்கி மக்களை ஏமாற்றுவதோடு, பயமுறுத்தி வருவது குறித்து ஏராளமான புகார் வந்ததால் சட்டவிரோத ஆப்ஸ்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
600 ஆப்ஸ்கள்
இந்த நடவடிக்கையின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அமைத்த குழு விசாரணையில் இறங்கிய நிலையில், தற்போது 600 சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ்கள் இயங்கி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புகார்கள்
இதுவரை 600 சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து மேலும் பல ஆப்ஸ்கள் புதிதாக தோன்றும் வாய்ப்பு உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அமைத்த குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் மோசடியான ஆப்ஸ்கள் மீது கடந்த ஒரு வருடத்தில் 2500 க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடவடிக்கை
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் இணைந்து சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ்களின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது. இந்த நடவடிக்கையால் சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
600 Illegal Lending Apps Found By RBI. Details here
600 Illegal Lending Apps Found By RBI. Details here | 600 சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ்: என்ன செய்ய போகிறது ரிசர்வ் வங்கி?